முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
உள்ளூர்

லக்கலையில் 78 வயது நபர் கொலை

லக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரபிட்டிய சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (10) காலை காயமடைந்த நிலையில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக கிடை…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
லக்கலையில் 78 வயது நபர் கொலை

லக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோரபிட்டிய சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (10) காலை காயமடைந்த நிலையில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து லக்கலை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரை தாஸ்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கிராமம் 01, மா ஓயா பகுதியில் வசித்து வந்த 78 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவருக்கும் அவரது மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து, மருமகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்தக் கொலையை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்காக லக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்