குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி முறைமையில் இன்று (11) முற்பகல் ஏற்பட்ட திடீர் கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்ததாவது, கோளாறுக்குள்ளான கணினி முறைமை தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
கணினி முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று முற்பகல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.




