இளம் பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படும் காவி உடை அணிந்த நபர் ஒருவரை உடுகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்ததன்படி, கைது செய்யப்பட்டவர் கனிஷ்ட வித்தியாலயமொன்றில் ஆசிரியராக பணியாற்றும் 33 வயதுடைய பிக்கு ஆவார்.
குறித்த இளம் பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்த காலப்பகுதியில் இருவரும் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் நிர்வாண காணொளிகளை பரிமாறிக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையிலான காதல் தொடர்பு முடிவடைந்துள்ளது. அதன் பின்னர், சந்தேகத்திற்குரிய பிக்கு குறித்த இளம் பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளம் பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த உடுகம பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.




