முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

கொழும்பு, மாளிகாவத்தை பீ.சி.சி. பாலம் அருகே இன்று (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இந்த து…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

கொழும்பு, மாளிகாவத்தை பீ.சி.சி. பாலம் அருகே இன்று (10) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவரான ‘கஞ்சிபானி இம்ரான்’ என்பவரின் நெருங்கிய உறவினர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்