முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

டிராக்டர் மீது மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

கிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹல கட்டுகம்பல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிராக்டரின் டிரெய்லரின் பின்புறத்தில் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 2026 ஆகஸ்ட் 8ஆம் திகதி இ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
டிராக்டர் மீது மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

கிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹல கட்டுகம்பல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிராக்டரின் டிரெய்லரின் பின்புறத்தில் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

2026 ஆகஸ்ட் 8ஆம் திகதி இரவு, மதவ ஹமனாகொட இணை வீதியில் மதவ பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்ற டிராக்டரின் டிரெய்லரின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிரியுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்