சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதன்படி, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் 2026 ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விடுதிகளுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல்கலைக்கழகம் மேற்கொண்ட தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோருக்கு பேராதனை பல்கலைக்கழகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.
2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளை வழமைபோன்று மற்றும் பாதுகாப்பாக முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.




