முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

குருவிட்ட சிறை மோதலில் இருவர் உயிரிழப்பு

குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகள் குழுவொன்றுக்கு இடையில் ஏற்பட்ட கடுமையான மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிற…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
குருவிட்ட சிறை மோதலில் இருவர் உயிரிழப்பு

குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகள் குழுவொன்றுக்கு இடையில் ஏற்பட்ட கடுமையான மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக ஆரம்பத்தில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்