மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 17 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2026 ஆகஸ்ட் 4ஆம் திகதி பிற்பகல் மாவத்தகம – அஹஸ்யானபிட்டிய வீதியில் சமூக மண்டபத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாவத்தகம பகுதியில் இருந்து அஹஸ்யானபிட்டிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் அமர்ந்து பயணித்தவரும் பலத்த காயமடைந்து மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சீராதுன்ன, மாவத்தகம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




