வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2026 ஆகஸ்ட் 4ஆம் திகதி பிற்பகல் பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவ வீதி பகுதியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 23 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், வாள் மற்றும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 20 வயதுடைய பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரின் இலங்கை போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் குற்றக் குழு உறுப்பினராக சந்தேகநபர் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொரலஸ்கமுவ வேவ வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் வாள் மற்றும் கத்தியுடன் மனிதக் கொலையொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபருக்கு எதிராக கடத்தல், தாக்குதல், நபர்களுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




