2026 ஆகஸ்ட் 03 ஆம் திகதி பிற்பகல் கினிகத்ஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ பகுதியில் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் மழை காரணமாக நீரில் மூழ்கியிருந்த வீதியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த நபர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக கினிகத்ஹேன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன நபர் அம்பகமுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்ஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



