2026 ஆகஸ்ட் 03 ஆம் திகதி காலை பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் அமைந்திருந்த வீடொன்று மண்சரிவுக்கு உள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்களில் இருவர் 47 மற்றும் 83 வயதுடைய மொரஹேனகம பகுதியைச் சேர்ந்த குறித்த வீட்டில் வசித்து வந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய இருவர் மாத்தளை பகுதியிலிருந்து வருகை தந்த அவர்களது உறவினர்கள் எனவும், அவர்களில் ஆண் ஒருவர் 22 வயதுடையவராகவும், பெண் ஒருவர் 58 வயதுடையவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் பொல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




