முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

கல்முனையில் கெப் வாகன விபத்தில் சாரதி பலி

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளவட்டுவான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கெப் வாகன சாரதி உயிரிழந்துள்ளார். 2026.08 அன்று மாலை மட்டக்களப்பு – கல்முனை வீதியில் கல்முனை நோக்கி பயணித்த கெப் வாகனம்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கல்முனையில் கெப் வாகன விபத்தில் சாரதி பலி

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளவட்டுவான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கெப் வாகன சாரதி உயிரிழந்துள்ளார்.

2026.08 அன்று மாலை மட்டக்களப்பு – கல்முனை வீதியில் கல்முனை நோக்கி பயணித்த கெப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, லொத்தர் விற்பனை நிலையம் மற்றும் வர்த்தக நிலையத்தின் பெயர்ப்பலகை பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சாரதி கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 39 வயதுடைய பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் லொத்தர் விற்பனை நிலையத்தில் இருந்த நபர் ஒருவரும் காயமடைந்து சிகிச்சைக்காக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்