முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

சீரற்ற காலநிலை: நுவரெலியா பாடசாலைகள் நாளை மூடல்

நிலவும் மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (04.08.2026) செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்விப் பிரிவின் அதிகார…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சீரற்ற காலநிலை: நுவரெலியா பாடசாலைகள் நாளை மூடல்

நிலவும் மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (04.08.2026) செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா கல்விப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்ததாவது, மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள் தேவைப்பட்டால் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மாகாணத்தின் ஆறு கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவைக்கேற்ப விடுமுறை வழங்க அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, ஹட்டன், கொத்மலை, நுவரெலியா, கம்பளை, கண்டி மற்றும் தெல்தெனிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவைக்கேற்ப விடுமுறை வழங்க முடியும்.

மேலும், மண்சரிவு அபாயம் காரணமாக கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு முன் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்