முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

22 ஆண்டு தாமதம்: பாலியல் வழக்கில் வெளிச்சம்

இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பில் நிலவும் அசாதாரண தாமதங்களை வெளிப்படுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில், 2001ஆம் ஆண்டு கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 11 வயத…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
22 ஆண்டு தாமதம்: பாலியல் வழக்கில் வெளிச்சம்

இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பில் நிலவும் அசாதாரண தாமதங்களை வெளிப்படுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில், 2001ஆம் ஆண்டு கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 11 வயது சிறுவன், சம்பவத்திற்குப் பிறகு சுமார் 22 ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டில்தான் உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற போது பாதிக்கப்பட்ட சிறுவனின் வயது 11 ஆக இருந்த போதிலும், நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கிய போது அவரது வயது 33 ஆக இருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சிறுவனை சட்டபூர்வ பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை நிராகரித்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்