இந்த வருடம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 362 மருந்தகங்களில் சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை விசேட மருந்தக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் 471 மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு நீதிமன்றங்களினால் மொத்தம் 2,269,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட மருந்தக சோதனை நடவடிக்கைகளின் போது 109 மருந்தகங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், 86 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.




