முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

105 லீற்றர் மதுபானம், 11.8 கிலோ கேரள கஞ்சா மீட்பு

பூகொட பகுதியில் சட்டவிரோத மதுபானம் 105 லீற்றருடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் தாராபுரம் பகுதியில் 11 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வாலான மத்திய ஊழல் தடுப்பு…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
105 லீற்றர் மதுபானம், 11.8 கிலோ கேரள கஞ்சா மீட்பு

பூகொட பகுதியில் சட்டவிரோத மதுபானம் 105 லீற்றருடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் தாராபுரம் பகுதியில் 11 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

வாலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (10) காலை பூகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டியகம பகுதியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 105 லீற்றர் சட்டவிரோத மதுபானம் அல்லது 140 போத்தல்களுடன் 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூகொட பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பூகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராபுரம் பகுதியில் மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ 800 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதனை மறைத்து வைத்த சந்தேகநபர்களை அடையாளம் காண மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்