செப்டெம்பர் 12ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஏற்பாடு செய்துள்ள பேரணியில் பங்கேற்க தேசிய சுதந்திர முன்னணி (NFF) தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
NFF அரசியல் பேரவை, SLPP விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பேரணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு பரந்த எதிர்க்கட்சி ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான ஒரு நடவடிக்கையாக இதனை கருத முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு கொண்டிருந்த விசேட சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கத்தை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வலுவான எதிர்பார்ப்பு அப்போது மக்களிடம் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், தற்போதைய அரசாங்கம் அந்த எதிர்பார்ப்புகளுக்கு முதுகைக் காட்டியுள்ளதாக விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். திருடர்களைப் பிடிப்பதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கமே ஊழலில் சிக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




