தேசிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களுக்கு எதிராக தினன தெற்க அமைப்பு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது பதவியின் மூலம் கிடைக்கும் கொடுப்பனவுகளை பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்துவதற்குப் பதிலாக, மக்கள் விடுதலை முன்னணியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டதன் மூலம் 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இடம்பெற்றுள்ளதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு கோரி தினன தெற்க அமைப்பு இன்று (02) காலை இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறும், சம்பந்தப்பட்ட கட்சியின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்குமாறும் முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
ஐந்து விடயங்களின் அடிப்படையில் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.




