ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைப்பது தொடர்பில் அரசியல்வாதி விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் விமானக் கொள்வனவு பரிவர்த்தனை தொடர்பில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, CIABOC இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
விமல் வீரவன்சவின் கருத்து நீதிமன்ற அவமதிப்பாக அமைந்துள்ளதா என்பது தொடர்பில் இதுவரை நீதிமன்றம் இறுதி தீர்ப்பு எதனையும் வழங்கவில்லை.




