முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலுக்கு ‘e-Court’ திட்டம்

இலங்கையின் அனைத்து நீதிமன்றங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் ‘e-Court’ திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக, நீதவான் நீதிமன்றங்கள்,…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலுக்கு ‘e-Court’ திட்டம்

இலங்கையின் அனைத்து நீதிமன்றங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் ‘e-Court’ திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக, நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களில் வழக்கு கோப்புகளை நிர்வகிப்பதற்குத் தேவையான டிஜிட்டல் முறைமைகளை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ், நீதித்துறை முறைமையின் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ மின்னஞ்சல் வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் இணையதளமான gov.lk இன் கீழ், 350 நீதிமன்றங்களுக்கு courts.gov.lk என்ற உத்தியோகபூர்வ பெயருடன் 1,050 மின்னஞ்சல் கணக்குகளை ஆரம்பகட்டத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றங்களில் நிலவும் சுருக்கெழுத்தாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக, வாய்மொழி வெளிப்பாடுகளை உடனடியாக எழுத்து வடிவமாக மாற்றும் (Voice-to-Text) தொழில்நுட்ப வசதிகளும் இந்த முறைமையில் இணைக்கப்படவுள்ளன.

அத்துடன், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டத்தின் (திருத்தம்) சட்டம் மற்றும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, இணையவழியில் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்காக அனைத்து நீதிமன்றங்களுக்கும் காணொளி மாநாட்டு வசதிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்