முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தைச் சவாலுக்கு உட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (20) உயர் நீதிமன்றத்தில் விச…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தைச் சவாலுக்கு உட்படுத்தித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (20) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

குறித்த சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர் அச்சல வெங்கப்புலி மற்றும் நீதியரசர் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர், குறித்த சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 23 மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்