இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காகச் சென்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பக் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தெரிவுசெய்யப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடு செய்ததுடன், அதற்குத் தேவையான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள உதவியமைக்காக அந்த நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த விசாரணை தொடர்பாக, முன்னர் சாமர சம்பத்தின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சி என்பவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




