வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய மருத்துவமனையின் இருதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி சிரந்தி ராஜபக்ஷ மாளிகாகந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்பிணை விண்ணப்பத்தை, மாளிகாகந்த நீதவான் ஜனிதா ரோஷணி பெரேரா இன்று (12) நிராகரித்துள்ளார்.




