முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருலப்பனை, பூர்வாராம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




