முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய காணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள சுமார் அரை ஏக்கர் காணி மற்றும் அதிலுள்ள சொத்துகள் தொடர்பில் முன்னர்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய காணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள சுமார் அரை ஏக்கர் காணி மற்றும் அதிலுள்ள சொத்துகள் தொடர்பில் முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைநிறுத்தல் மற்றும் தடை உத்தரவுகளை மீண்டும் அமுல்படுத்துமாறு மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் சிறப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மோஷன் மனுவொன்றின் ஊடாக முன்வைத்த விடயங்களை பரிசீலித்த பின்னர், மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மேலும், குறித்த காணி மற்றும் சொத்துகள் தொடர்பில் சட்டபூர்வமான அல்லது நல்லெண்ண அடிப்படையிலான உரிமை (Bona fide ownership) கொண்ட வேறு தரப்பினர் இருப்பின், நேற்று (06) முதல் 14 நாட்களுக்குள் அது தொடர்பான விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த காணியின் சட்டபூர்வ உரிமையாளர் என பசில் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக உரிமை கோராத நிலையில், சட்டவிரோதமாக சொத்துகளை ஈட்டியமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக சொத்துகளைப் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விரிவான விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்