முக்கியச் செய்தி
இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அதிகரிப்புமார்பகப் புற்றுநோயால் நாளொன்றுக்கு மூவர் உயிரிழப்புஇணையப் பதிவுக்காக சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் தொடர்பில் பிபிசி அறிக்கைநாமல் மீது குற்றச்சாட்டுகள் இல்லை என சாகர காரியவசம் தெரிவிப்புசீட் பெல்ட் அணியாத 3,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைஇலங்கையில் எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அதிகரிப்புமார்பகப் புற்றுநோயால் நாளொன்றுக்கு மூவர் உயிரிழப்புஇணையப் பதிவுக்காக சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் தொடர்பில் பிபிசி அறிக்கைநாமல் மீது குற்றச்சாட்டுகள் இல்லை என சாகர காரியவசம் தெரிவிப்புசீட் பெல்ட் அணியாத 3,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Island edition
··
LankaNews
அரசியல்

மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருளுடன் கைது

இலங்கை பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருளுடன் கைது

இலங்கை பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இன்று (06) காலை ஐஸ் போதைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்ற விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவர் டுபாய்க்குச் சென்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிலருடன் விருந்தொன்றில் கலந்துகொண்ட காட்சிகள் அடங்கிய காணொளித் தொகுப்பு விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காட்சிகளில் ‘மோதர நிபுண’ என அழைக்கப்படும் குற்றவாளியின் சகோதரர் சதுர தில்ருக்ஷான் மற்றும் ‘கேசல்வத்தே தினூஷ’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் காணப்படுவதாகவும், அவர்களுடன் கஹந்தகம நெருக்கமாக செயற்படும் விதம் அந்தக் காட்சிகளில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்கள் கஹந்தகமவை ‘டாடா’ என அழைப்பதும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும், ‘இப்பாகேவத்தே சுஜீ’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருடனும் அவர் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகவும், இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இப்பாகேவத்தே சுஜீ’யிடம் பெற்ற ஐஸ் போதைப்பொருளுக்கான பணத்தை செலுத்தத் தவறியதன் காரணமாக கஹந்தகமவுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், மஹிந்த கஹந்தகமவிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் 1,100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நுகேகொடை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மத்திய குற்ற விசாரணைப் பணியகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (06) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவு பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்