பிரபல ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளரும் வர்த்தகப் பெண்ணுமான ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் முன்வைத்த பிணை கோரிக்கைகள் தொடர்பான தீர்ப்பும் ஒக்டோபர் 16ஆம் திகதி அறிவிக்கப்படும் என அந்த உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.




