முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ முன்வைத்துள்ள எதிர்பார்ப்பு பிணை மனு தொடர்பில் விடயங்களை அறிக்கையிடுவதற்காக, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியை ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த எதிர்பார்ப்பு பிணை மனு இன்று (06) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று (05) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் எதிர்பார்ப்பு பிணை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.




