பிணைப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (05) வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், ஞானசார தேரரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் ஞானசார தேரர் இன்று (04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.




