முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

கப்ராலின் விடுதலை கோரிக்கை தொடர்பான உத்தரவு நாளை

மேலதிக சாட்சியங்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் தம்மை விடுதலை செய்யுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முன்வைத்த கோரிக்கை தொடர்பான உத்தரவை மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர் குழா…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கப்ராலின் விடுதலை கோரிக்கை தொடர்பான உத்தரவு நாளை

மேலதிக சாட்சியங்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் தம்மை விடுதலை செய்யுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முன்வைத்த கோரிக்கை தொடர்பான உத்தரவை மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர் குழாம் நாளை அறிவிக்கவுள்ளது.

கிரேக்கப் பிணைமுறிகளில் பணத்தை முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முறைப்பாட்டுத் தரப்பு தவறியுள்ளதாக கப்ரால் தனது கோரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனோஜ் தல்கொடபிட்டிய தலைமையிலான உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக ஸ்ரீ ராகல ஆகிய நீதியரசர்களைக் கொண்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஜனாதிபதி சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இந்தப் பரிவர்த்தனை சட்டபூர்வமான முதலீடு எனவும், கப்ராலுக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் பொறுப்பும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரத்நாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தனது சேவை பெறுநருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு சார்பில் அதன் பிரதி பணிப்பாளர் அனுஷா சம்பந்தன்பெரும முறைப்பாட்டை வழிநடத்தினார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்