முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் கோட்டாபய உச்சநீதிமன்றம் செல்கிறார்

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் கோட்டாபய உச்சநீதிமன்றம் செல்கிறார்

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தமைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் இந்தத் தீர்ப்பை அறிவித்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரினார்.

இந்த வழக்கு தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இதுவரை எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படாததால், பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்படாது எனவும், எனவே விசாரணைகளில் தலையிட நீதிமன்றம் எதிர்பார்க்கவில்லை எனவும் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய தெரிவித்துள்ளார்.

மேன்முறையீடு செய்வதற்கான அனுமதியைக் கோரும் விடயங்கள் தொடர்பில் ஒக்டோபர் 09ஆம் திகதி வாதங்களை முன்வைக்க முடியும் என கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில் சட்டத்தரணி சனத் விஜேவர்தனவுடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா மற்றும் அலி சப்ரி ஆகியோர் ஆஜராகினர்.

சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஆஜரானார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்