ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் நிதி செயலாளர் பி.பி. ஜயசுந்தரவிடம் சுமார் 4 மணிநேரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
நிக்கவரெட்டியாவில் அமைந்துள்ள பி.பி. ஜயசுந்தரவின் வீட்டிற்குச் சென்று அதிகாரிகள் இந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




