முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

அரச சேவைக்கு ஒரே தேசிய டிஜிட்டல் முறைமை

பல்வேறு அரச நிறுவனங்களால் தனித்தனியாக இயக்கப்படும் வெவ்வேறு முறைமைகளுக்குப் பதிலாக, முழு அரச சேவையையும் உள்ளடக்கும் வகையில் ஒரே தேசிய முறைமையை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கவ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
அரச சேவைக்கு ஒரே தேசிய டிஜிட்டல் முறைமை

பல்வேறு அரச நிறுவனங்களால் தனித்தனியாக இயக்கப்படும் வெவ்வேறு முறைமைகளுக்குப் பதிலாக, முழு அரச சேவையையும் உள்ளடக்கும் வகையில் ஒரே தேசிய முறைமையை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மாற்றத் திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்