ஏர்பஸ் சம்பவம் தொடர்பான பணச்சலவை குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற நிபந்தனையும் சந்தேகநபருக்கு விதிக்கப்பட்டுள்ளது.




