சமூக செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிடம் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (29) சாட்சியங்களைப் பதிவு செய்தது.
இன்றைய தினம் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை நிறைவடைந்ததுடன், மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்வது நவம்பர் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




