முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

சங்கீத் ஜயசேகர மீண்டும் விளக்கமறியலில்

கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பயிற்சி முகாம் மற்றும் குண்டு தயாரிப்பு நிலையம் இருப்பதாக போலியான தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சங்கீத் ஜயச…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சங்கீத் ஜயசேகர மீண்டும் விளக்கமறியலில்

கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பயிற்சி முகாம் மற்றும் குண்டு தயாரிப்பு நிலையம் இருப்பதாக போலியான தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சங்கீத் ஜயசேகர என்பவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சந்தேகநபர், கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இந்த முற்றிலும் தவறான தகவலை வெளியிட்டுள்ளார்.

விசாரணைகளின்போது சந்தேகநபர் மூன்று தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்தமை மற்றும் மேலும் பல போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.

மேலும், கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த வன அலுவலர் ஒருவர் தமக்கு இந்தத் தகவலை வழங்கியதாக சந்தேகநபர் தெரிவித்திருந்த போதிலும், குறித்த அதிகாரியிடமும் அவரது மனைவியிடமும் பெற்ற வாக்குமூலங்களின் அடிப்படையில் அவ்வாறான தகவல் எதுவும் வழங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் தொலைபேசி பதிவுகளை விரிவாக பரிசோதிப்பதுடன், போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியமை தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்