முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

சிறுவர்கள் தொடர்பான செய்திகளுக்கு தேசிய ஊடக வழிகாட்டி

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும் போது அவர்களின் கௌரவம், தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தேசிய ஊடக வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அம…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
சிறுவர்கள் தொடர்பான செய்திகளுக்கு தேசிய ஊடக வழிகாட்டி

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும் போது அவர்களின் கௌரவம், தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தேசிய ஊடக வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஆலோசனைக் குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தலைமையில் செப்டம்பர் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

செய்தி அறிக்கையிடலில் துல்லியத்தையும் நியாயத்தையும் பேணுவதுடன், சிறுவர்களின் சிறந்த நலனை உறுதி செய்வதே இந்த வழிகாட்டுதல்களின் நோக்கமாகும்.

அத்துடன், அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக சிறுவர்களும் அவர்களது குடும்பங்களும் தேவையற்ற வகையில் பொது வெளியில் அடையாளப்படுத்தப்படுவதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.

ஊடக அறிக்கையிடலின் போது மாற்றுத்திறனாளி சிறுவர்களின் கௌரவம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்