முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு இன்று வாக்கெடுப்பு

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதத்தின் இறுதி நாள் இன்று (25) நடைபெறுகிறது. இதன்படி, குறித்த…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு இன்று வாக்கெடுப்பு

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதத்தின் இறுதி நாள் இன்று (25) நடைபெறுகிறது.

இதன்படி, குறித்த சட்டமூலங்கள் தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் நேற்று (24) ஆரம்பமானது.

குறித்த சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்தை கடந்த 22ஆம் திகதி சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாட்டையும் நிறைவேற்றுவதற்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார். தேவையான பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும்.

அதேவேளை, நீதித்துறை அமைப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல எனவும், அதனை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்