முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய நீதித்துறை சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய நீதித்துறை சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றிய விசேட தர அதிகாரியான ஆனந்தி கனகரத்தினம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய விசேட தர அதிகாரியான ஞானேச லலித் கன்னங்கர ஆகியோர் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி திசாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்