முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

‘ஹரக் கட்டா’–‘கெஹெல்பத்தர பத்மே’ மோதல் குறித்து விசாரணை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன அல்லது ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி அல்லது ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் சி…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
‘ஹரக் கட்டா’–‘கெஹெல்பத்தர பத்மே’ மோதல் குறித்து விசாரணை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன அல்லது ‘ஹரக் கட்டா’ மற்றும் மந்தினு பத்மசிறி அல்லது ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிசறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ மற்றும் ‘கெஹெல்பத்தர பத்மே’ ஆகியோருக்கு இடையில் நேற்று (22) இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த ‘கெஹெல்பத்தர பத்மே’ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது வெலிசறை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்