முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 29 வரை மீண்டும் விளக்கமறியலில்

ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான பரிவர்த்தனையில் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 29 வரை மீண்டும் விளக்கமறியலில்

ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான பரிவர்த்தனையில் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை செப்டெம்பர் 29ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (18) உத்தரவிட்டார்.

இதன்படி, செப்டெம்பர் 22ஆம் திகதி எழுத்துமூல பிணை மனுவை தாக்கல் செய்யுமாறு நாமல் ராஜபக்ஷ சார்பிலான சட்டத்தரணிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார். அதேவேளை, இந்த வழக்கின் முறைப்பாட்டாளரான இலஞ்ச ஆணைக்குழு தனது ஆட்சேபனைகளை செப்டெம்பர் 25ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான பரிவர்த்தனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு முன்னதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்