முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்ச இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
அவருடன் ரோஹித்த ராஜபக்சவின் மாமியாரான ஆன் டி லிவேராவும் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் இன்று அதிகாலை சுமார் 1.10 மணியளவில் சிங்கப்பூர் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான SQ-469 விமானத்தில் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
சுகவீனம் காரணமாக சிராந்தி ராஜபக்ச அண்மையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.




