முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

தேசபந்து உள்ளிட்ட மூவர் அடிப்படை உரிமைகளை மீறியதாக தீர்ப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்துக சில்வா ஆகியோர் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு, முன்னாள…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
தேசபந்து உள்ளிட்ட மூவர் அடிப்படை உரிமைகளை மீறியதாக தீர்ப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்துக சில்வா ஆகியோர் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு, முன்னாள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (15) தீர்ப்பளித்துள்ளது.

ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு தொடர்பிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் ரவி செனவிரத்னவை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்