முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

ராஜித உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை

2012ஆம் ஆண்டு மோதர மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதில் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ராஜித உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை

2012ஆம் ஆண்டு மோதர மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதில் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (14) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இதன்போது, முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், பின்னர் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் குறித்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலதிக சாட்சி விசாரணை நவம்பர் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்