முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

யோஷித ராஜபக்ஷ வழக்கில் சாட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பணமோசடி வழக்கில் பொய்யான சாட்சியம் வழங்கியதாகக் கூறப்படும் ரியல் எஸ்டேட் வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
யோஷித ராஜபக்ஷ வழக்கில் சாட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பணமோசடி வழக்கில் பொய்யான சாட்சியம் வழங்கியதாகக் கூறப்படும் ரியல் எஸ்டேட் வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேன் ரணதுங்க முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பாலித கமகே எனப்படும் இந்தச் சாட்சி பொய்யானதும் முரண்பாடானதுமான சாட்சியங்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) வழங்கிய வாக்குமூலத்திற்கு முற்றிலும் முரணான வகையில் சாட்சி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கு விசாரணையின்போது சுட்டிக்காட்டினார்.

யோஷித ராஜபக்ஷ ரத்மலானை பகுதியில் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் காணி தொடர்பான உறுதிப்பத்திரங்கள் இந்தச் சாட்சியிடம் இருந்து பின்னர் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு நீதிமன்றத்தில் பொய்யான சாட்சியம் வழங்குவது வழக்கின் ஏனைய சாட்சிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என முறைப்பாட்டுத் தரப்பு வலியுறுத்தியது.

பொய்யான சாட்சியம் வழங்கியதாகக் கூறப்படும் பாலித கமகேவை 2 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணை நடைபெறும் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என அவரை கடுமையாக எச்சரித்தார்.

யோஷித ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் முன்னிலையானார். வழக்கின் மேலதிக விசாரணை ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்