டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர வீட்டுத் தொகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான வீடொன்றை ஷிரான் பாசிக் கொள்வனவு செய்துள்ளதாகவும், அந்த வீடு அவரது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.




