உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (08) இலங்கைக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவையும் சந்திக்க உள்ளார்.
மேலும், ராஜ்நாத் சிங் இன்று பிற்பகல் ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் நடைபெறவுள்ள மத நிகழ்வொன்றில் கலந்துகொள்ள உள்ளதுடன், நாளை நுவரெலியா சீதையம்மன் கோவிலில் நடைபெறவுள்ள மத நிகழ்விலும் கலந்துகொள்ள உள்ளார்.
இதனிடையே, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இன்று மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று தெரிவித்தார்.




