இலங்கை பட்டய ஊடகக் கல்வி நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்பதால், அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் நேற்று (08) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிவிப்புகள் இடம்பெற்றன.
இலங்கை பட்டய ஊடகக் கல்வி நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் விளக்கத்தை சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
இதன்போது, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதால், சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என சபாநாயகர் தெரிவித்தார்.
எனினும், உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டால், அதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.




