முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

பொலிஸ் பதவி உயர்வுக்கு எதிரான 40 மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

அண்மைக் காலங்களில் பொலிஸ் சேவையின் பல்வேறு தரங்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட பதவி உயர்வுகளைச் சவாலுக்கு உட்படுத்தி, பதவி உயர்வு கிடைக்காத சுமார் 1,050 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்திகளா…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பொலிஸ் பதவி உயர்வுக்கு எதிரான 40 மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

அண்மைக் காலங்களில் பொலிஸ் சேவையின் பல்வேறு தரங்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட பதவி உயர்வுகளைச் சவாலுக்கு உட்படுத்தி, பதவி உயர்வு கிடைக்காத சுமார் 1,050 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்திகளால் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 40 அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் சம்பத் விஜேரத்ன ஆகியோரின் இணக்கத்துடன், உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தன இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளார்.

2019, 2020, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித் ஜயசுந்தர, சி.டி. விக்கிரமரத்ன மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் பதவிக் காலங்களில் வழங்கப்பட்ட பதவி உயர்வுகளே இந்த மனுக்கள் மூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் சார்ஜன்ட் பதவிக்கும், பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கும், உப பொலிஸ் பரிசோதகர் பதவியிலிருந்து பொலிஸ் பரிசோதகர் பதவிக்கும் வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் இதில் அடங்குகின்றன.

பதவி உயர்வுகளை வழங்குவதில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறுவதற்கு நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்தக்கூடிய போதுமான தகவல்களை மனுதாரர்கள் முன்வைக்கத் தவறியுள்ளதாக தீர்ப்பை அறிவித்த நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையின் கீழ் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதற்கான அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நிரூபிக்க மனுதாரர்கள் தவறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்