முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
அரசியல்

பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட சிறைத்தண்டனை

முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதன்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட சிறைத்தண்டனை

முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் “ஊழல்” என்ற குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2014ஆம் ஆண்டு மே தினப் பேரணியில் கலந்துகொண்ட தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தினால் 320,000 ரூபாய் தொகை விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்